தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும்

தலைஞாயிறு பேரூராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என செயல் அலுவலரிடம் முஸ்லிம் பெண்கள் மனு அளித்தனர்.

Update: 2022-07-12 17:58 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், வலம்புரி சாலை, பள்ளிவாசல் தெரு, இடம்புரி, சந்தைவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தலைஞாயிறு பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சரிவர குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நாள்தோறும் பேரூராட்சிக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் 6 லட்சம் லிட்டர் குடிநீர் வருகிறது. சிலர் குடிநீர்குழாயில் சட்டவிரோதமாக மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதை தடுத்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்துஇதை தொடர்ந்து முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாநில விவசாயிகள்கள் குழு உறுப்பினர் மகா குமார் அங்கு வந்து பேரூராட்சி செயலாளரிடம், நடத்திசட்ட விரோதமான குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து.பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அறிவிப்பின்படி இன்று(புதன்கிழமை), நாளை(வியாழக்கிழமை), 15-ந்தேதி ஆகிய 3 நாட்களுக்கு குடிநீர் வழங்க இயலாது. அதன்பிறகு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்