மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

நாகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் பார்வையிட்டு ஆய்வு செய்தா

Update: 2022-10-21 18:45 GMT

நாகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

நாகை நகராட்சிக்குட்பட்ட ஆரிய நாட்டுத்தெருவில் நகராட்சி நிதியின் கீழ் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுத்தெரு நகராட்சி முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் வழங்கப்படுவது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வடக்குப்பொய்கை நல்லூரில் அரசு துணை சுகாதார நிலையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளி வீட்டிற்கு சென்று மருந்து பெட்டகத்தினை வழங்கினார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பின்னர் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.10.79 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யும் பணி, திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டார்.

மேலும் திருக்குவளை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி மற்றும் சமத்துவபுர மறுசீரமைப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகட்டும் பணி உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து கருவேலங்கடை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் விதை வினியோகத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு பாரம்பரிய கருப்புக்கவுனி நெல் விதைகள், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு வரப்பு உளுந்து ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கருங்கண்ணி ஊராட்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை அருண்ராய் வழங்கினார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்