நெல்லை மேயருக்கு திராவிடர் கழகத்தினர் நன்றி
பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக நெல்லை மேயருக்கு திராவிடர் கழகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை என பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோருக்கு நெல்லை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் பொன்னாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச.ராஜேந்திரன், செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை நீலகிருஷ்ணபாபு, கி.சவுந்தரராசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.