திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த அனுக்கூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு விநாயகர் பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவற்றுடன் முதல் கால யாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் திரவுபதி அம்மன், மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் ெசய்திருந்தனர்.