திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிதம்பரம் அருகே திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
பரங்கிப்பேட்டை
சிதம்பரம் அருகே உள்ள நக்ரவந்தன்குடி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திரவுபதி அம்மனுக்கு 3 கால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் மேளதாளம் இசைக்க யாக சாலையில் இருந்த புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு கோவில் விமான கலசங்களுக்கும் அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதில் நக்ரவந்தன்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை நக்ரவந்தன்குடி கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.