திரவுபதி அம்மன் கோவில் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-08-03 19:47 GMT

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிலோன் ஆபீஸ் அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இக்கோவிலில் மகாபாரத கிருஷ்ணன், பெருமாளாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது. கடந்த 21-ந் தேதி கணபதி ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. 28-ந் தேதி சக்தி அழைப்பு மற்றும் 29-ந் தேதி திருமஞ்சனம், பூங்கரகம், 31-ந் தேதி திருமஞ்சனமும், பூங்கரமும் நடைபெற்றது. நேற்று காலை திருமஞ்சனமும், அதைத்தொடர்ந்து நல்லராவண் சிரசு புறப்பாடு மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து நடைபெற்றது. இதில் சிவன், பார்வதி, கருப்புசாமி, கிருஷ்ணர் போன்று வேடமிட்டவர்கள் வழிநெடுகிலும் ஆடிக்கொண்டு வந்தனர். பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி வழியாக கோவிலை அடைந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிக அளவில் கூட்டம் இருந்ததால் போலீசார் பாலக்கரையில் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை மாற்று பாதையில் 5 மணி நேரத்திற்கு மேலாக திருப்பி விட்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) மூங்கில் குளத்தில் புதிய அம்மன் கூந்தல் முடிதலும், அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்