வாய்க்கால் தூர்வாரும் பணி
கீரப்பாளையத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புவனகிரி,
கீரப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 300 மீட்டர் தூரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கடலூர் கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன், ஒன்றிய பொறியாளர்கள் முருகானந்தம், வனிதா, மேற்பார்வையாளர் விஜயலட்சுமி, கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன், .ஊராட்சி செயலாளர் முருகவேல், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். பின்னர் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார்.