டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
சேரன்மாதேவியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சிறப்புகள் குறித்து பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி விளக்கி கூறினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.