டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில்தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ், தேசிய வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரி முதல்வர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.