டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.