மினி லாரி மீது கார் மோதியதில் டாக்டர் பலி

கரூர் அருகே மினி லாரி மீது கார் மோதியதில் டாக்டர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Update: 2023-09-14 18:36 GMT

மினி லாரி மீது கார் மோதல்

சென்னை பல்லாவரம் கீழ்கட்டளையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் சாமிநாதன் (வயது 32). இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராகவும், டாக்டராகவும் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சாமிநாதனும், கரூர் மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலரும், டாக்டருமான பொன்ராஜ் என்பவரும் ஒரு காரில் சின்னதாராபுரத்தில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த கார் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுப்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

டாக்டர் பலி

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய சாமிநாதன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். பொன்ராஜ் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயம் அடைந்த பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சாமிநாதனின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்