பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தேனி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே மு.புளியங்குளத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 30). இவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "வடபுதுப்பட்டியை சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜேஷ்குமார் (41) ஆசைவார்த்தைகள் கூறி என்னை திருமணம் செய்தார். பின்னர் நானும், எனது கணவரும் பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். வேறு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி விவாகரத்து கேட்டு கொடுமை செய்தார். அதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் அவருடைய கணவர் ராஜேஷ்குமார், மாமனார் பால்ராஜ், மாமியார் லட்சுமி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்