லோடுஆட்டோவில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி அருகே லோடுஆட்டோவில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-02 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

வாகன தணிக்கை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் போலீஸ் ஏட்டு கந்தசுப்பிரமணியன், பூலை நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் நயினார்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போ அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டாராம். அதே நேரத்தில் ஆட்டோவில் இருந்த மற்றொரு நபரான தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கண்ணன் (31) என்பவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லோடு ஆட்டோவில் சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 38 மூட்டைகளில் மொத்தம் 1520 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கைது

தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி வெளி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முத்துக்குமார், பிரபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்