இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

பழனி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2022-06-06 17:19 GMT

பழனி அருகே கொழுமம்கொண்டான் கிராமத்தில், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதற்கு தொப்பம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பந்தயத்தில் பழனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பின்னர் பந்தயத்தில் வென்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்