வீடு, வீடாக கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடு, வீடாக கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-17 13:39 GMT

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மேலத்தாங்கல், வெளுகம்பட்டு, விசாமங்களம், ரெட்டிக்குப்பம், ரகுநாதசமுத்திரம், செப்டாங்குளம், மோசவாடி, ஆவணியாபுரம், அல்லியந்தல் உள்பட பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

செய்யாறு மாவட்ட பூச்சியியல் வல்லுனர் எஸ்.துரைராஜ் தலைமையில் டாக்டர் சக்தி பூரணி, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், வையாபுரி, ரகுபதி, கமலக்கண்ணன், தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் கிராமங்களில் மேல்நிலை நீர்த்தொட்டியில் தண்ணீர் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா என்றும், வீடு வீடாக சென்று தொட்டியில் லார்வா கொசுபுழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அந்தந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், டேங்க் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து கிராம பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

இதில் வெளுகம்பட்டு கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்