எஸ்.புதூர் பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை
எஸ்.புதூர் பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது.;
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து கழுதைப்பால் விற்பனையாளரான விருத்தாச்சலத்தை சேர்ந்த மாமுண்டி கூறும்போது, நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கழுதைப்பால் விற்று வருகிறோம்., ஒரு பகுதிக்கு ஆண்டு ஒரு முறை வருவோம். கழுதைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது செரிமான பிரச்சினை, வாந்தி, மந்த தன்மை நீங்கும் எனவும், பெரியவர்கள் குடித்தால் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குணமாகும். 20 மில்லி கொண்ட கழுதைப்பால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்றார். பொதுமக்களும் கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.