அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் ரூ.39 ஆயிரம் காணிக்கை
அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் ரூ.39 ஆயிரம் காணிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் மலை மீது அமர்ந்திருக்கும் அதுல்யநாதீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பாலமுருகன், சூரிய நாராயணன், எழுத்தர் தினேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை பணத்தை எண்ணினர். முடிவில் 39 ஆயிரத்து 898 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.