கீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.;

Update:2023-09-17 02:19 IST

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 31 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 2-ம் நாளான நேற்று முன்தினம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் கீழக்கலங்கல் கிளை சார்பில் சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் நாடார் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தென்காசி மாவட்ட துணை செயலாளர் அய்யாச்சாமி, கிளை நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், முருகன், செல்வக்குமார், தங்கம், நாடார் மகாஜன சங்க மாவட்ட துணை தலைவர் சண்முகராஜா, அருள்ராஜ், சமுதாய நாட்டாண்மை மனோகரன், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் சுந்தரதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்