பொதுமக்களை கடித்துக் குதறும் நாய்கள்
பொதுமக்களை கடித்துக் குதறும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துவதும் கடிப்பதுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.