கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த 'டாக் பே' வசதி

கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த ‘டாக் பே’ வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

Update: 2023-02-16 18:45 GMT

கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த 'டாக் பே' வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

மத்திய அரசு 'டிஜிட்டல்' முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. அதன்படி பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக கியூஆர்கோடு அட்டைகள் வைக்கப் பட்டு உள்ளன. இதை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்த நிலையில் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'டாக் பே' என்ற பெயரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக கியூஆர்கோடுகளை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

கியூஆர் கோடு

அதன்படி 'இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி' (ஐ.பி.பி.பி.) திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங் கும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் பணம் பெற வசதியாக கியூஆர்கோடு அட்டை வழங்கப்படுகிறது.

இதற்காக கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அங்கு ஆதார் அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்து வியாபாரிகள் கியூஆர் கோடு அட்டைகளை பெற்று செல்கின்றனர்.

சிறப்பு முகாம்

இது குறித்து கோவை கோட்ட தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வியாபாரிகளுக்கு கியூஆர்கோடு அட்டை வழங்கப்படும். தபால் நிலையத்தில் கணக்கு இல்லாதவர்கள், இந்த முகாமில் உரிய ஆவணங்களை கொடுத்து கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.

உடனே அவர்களுக்கு தபால் துறை அறிமுகப்படுத்திய உள்ள 'டாக் பே' என்ற கியூஆர் கோடு அட்டை வழங்கப்படும். அதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த சிறப்பு முகாம் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை நடக்கிறது.

வியாபாரிகள் கடையில் வைத்து உள்ள 'டாக் பே' என்ற கியூஆர் கோடை செல்போன் செயலியை ஸ்கேன் செய்து வாடிக்கையா ளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். அந்த பணம் வியாபாரி யின் கணக்கில் சேர்ந்து விடும்.

இந்த முகாமில் 3 நாட்களில் மொத்தம் 40 வியாபாரிகள் டாக் பே கியூஆர் கோடு வாங்கி சென்று உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்