டாக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
டாக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40). டாக்டரான இவர் கடந்த 14-ந் தேதி மாலை தனது நர்சிங் ஹோம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அவர் இரவு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக விஜய் ஆனந்த் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் விஜய் ஆனந்த்தின் மோட்டார் சைக்கிளை திருடியது பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் பாலாஜி(20) மற்றும் 18, 17 வயதுடைய சிறுவர்கள் ஆகிய 3 பேர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அதில் 17 வயதுடைய சிறுவனை போலீசார் சொந்த ஜாமீனிலும், மற்ற 2 பேரை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.