கடலூரில் திமுக பெண் கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கடலூரில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-19 18:45 GMT

கடலூர் முதுநகர் பழையவண்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சங்கீதா 30-வது வார்டு கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆவார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் இவரது வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது காரின் பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடி உடைந்திருந்தது. இதை பார்த்து கவுன்சிலரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இது பற்றி பக்கத்து வீடுகளிலும் அவர்கள் விசாரித்தனர். ஆனால் கார் கண்ணாடியை உடைத்தது யார்? என்பது பற்றி தெரியவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கி கார் கண்ணாடியை உடைத்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும், கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலரின் கார் கண்ணாடியை உடைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்