தி.மு.க. பயிற்சி பாசறை கூட்டம்
காரைக்குடியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.ஆர். பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெறுகிறது என்று பேசினார்.
பின்னர் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கருணா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், மாவட்ட பொருளாளர் சுப துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், காரைக்குடி நகர்மன்றத்தலைவர் முத்துத்துரை, காரைக்குடி நகரசெயலாளர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப சின்னதுரை, குன்றக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துஷாந்த் பிரதீப் நன்றி கூறினார்.