குப்பை கிடங்கு அமைக்க தி.மு.க. கோரிக்கை

தெற்கு கள்ளிகுளத்தில் குப்பை கிடங்கு அமைக்க தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது

Update: 2022-11-22 21:14 GMT

வள்ளியூர் (தெற்கு):

தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் தெருக்களிலும், வீடுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஊரின் கிழக்கு பகுதியில் சாலையோரம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் - இட்டமொழி சாலை ஓரமாக ஊரின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் குடியிருப்புக்கள் உள்ளன. இந்த குப்பை கிடங்கில் சில நேரங்களில் யாராவது தீ வைத்து விடுகின்றனர். இதனால் அருகில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சாலையில் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாதுகாப்பாக சேமிக்கின்ற விதத்தில் சுற்றுப்புற பாதுகாப்பு சுவருடன் குப்பை கிடங்கு அமைத்து தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்