தி.மு.க. அரசு மக்களை பற்றி சிந்திக்க மறந்து விட்டது

தி.மு.க. அரசு மக்களை பற்றி சிந்திக்க மறந்து விட்டது என விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2022-12-14 19:39 GMT


தி.மு.க. அரசு மக்களை பற்றி சிந்திக்க மறந்து விட்டது என விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300 பெண்கள் உள்பட 2,300 பேர் கலந்து கொண்டனர். விருதுநகரில் மின்வாரிய அலுவலகம், அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிந்திக்க மறந்து விட்டது

தி.மு.க. அரசு மக்களை பற்றி சிந்திக்க மறந்து விட்டது. ரேஷன் கடைக்கு சென்றால் பொருட்கள் கிடைப்பதில்லை. வீடுகள் கடைகள் ஆகியவற்றிற்கும் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. தி.மு.க. அரசு மீது மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் நகர செயலாளர் முகமதுநைனார், ஒன்றிய செயலாளர் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சரவண குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி

காரியாபட்டி அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பழனி, நகர செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமேகலை, மாவட்ட இளைஞரணி அவைத்தலைவர் ஆவியூர் ரவி, காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குண்டுகுமார், மாவட்ட வழக்கறிஞர் துணை செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நரிக்குடி

நரிக்குடி கிழக்கு ஒன்றிய சார்பில் ஆணைக்குளம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையிலும், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வீரபாண்டி, முத்துராமலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்