தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
ரெண்டாடி, மேல்வெங்கடாபுரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி, மேல்வெங்கடாபுரம் கிராமத்தில் சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ்.என்.உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முரளி, முகமதுஅலி, ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர்கள் மணி, நதியாவெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி பாபு என்கிற ஜெகதீசன் வரவேற்றார். தெருமுனை பிரசார கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், சுய உதவி குழுக்கள் கடன் உதவி மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட சாதனைகளை விளக்கினார்.
மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.சேகர், ரெண்டாடி ஊராட்சி மன்ற தலைவர் சுதாபாபு, வடகடப்பந்தாங்கல் அனிதாஸ்டீபன் மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜவர்மன் நன்றி, கூறினார்.
இதேபோன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் நடந்த தெருமுனை பிரசாரத்திற்கு நகர செயலாளர் மு.கோபி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அசோகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.