தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அலங்காநல்லூர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-08 21:21 GMT

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே உள்ள 15-பி. மேட்டுப்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் நடைபெற்றது. பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமை தாங்கினார். சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரந்தாங்கி முத்தையன், விவசாய அணி தலைவர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் அருண்குமார், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், பால்பாண்டி, ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டலை சரவணன், தங்கதுரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தவசதிஷ், சிறுபான்மை அணி அமைப்பாளர் அக்பர், நகர் அவை தலைவர் குருதங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்