தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக, மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்களான கீதாஜீவன் (வடக்கு), அனிதா ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்யமறுக்கும் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார். இந்த போராட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவுநிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.