தி.மு.க. சார்பு அணிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்; மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் அறிக்கை

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-17 19:06 GMT

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட சார்பு அணிகளுக்கு ஒரு தலைவர், துணைத்தலைவர், அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்துக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள், நகர கழகத்துக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள், பேரூர் கழகத்திற்கு ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் பாக அளவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு தலா ஒரு அமைப்பாளர், 2 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவரணி மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்ட அளவில் நியமிக்கப்படும் இளைஞரணியினருக்கு உச்ச வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும். மாவட்ட மாணவரணி பதவிக்கு விண்ணப்பிப்போர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு அமைப்பாளர் 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் ஒரு பெண் துணை அமைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒன்றிய நகர பேரூர் அமைப்புகளில் மாணவரணி பதவிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் ஒரு பெண் துணை அமைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.

கட்சி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தொண்டர்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், மகளிர்கள் ஆகியோர் மாவட்ட கழகம், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று முறையாக பூர்த்தி செய்து வருகிற 25-ந்தேதிக்குள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்