தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
வாணியம்பாடியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தேவராஜி எம்.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் ஆகியோர் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன், எஸ்.தாமோதரன், கே.ஆர்.திருப்பதி, டி.சாமுடி, உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.