திமுக நிர்வாகிகள் திடீர் தர்ணா - அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு
திமுக உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது
சென்னை,
திமுக உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளரை நியமிக்க கோரி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிலையசெயலாளர் பூச்சி முருகன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது..
திமுக நிர்வாகிகள் திடீர் தர்ணா! அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு #DMK https://t.co/8CKU6dblgu
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2022