நாங்குநேரியில் தி.மு.க. அலுவலகம்
நாங்குநேரியில் தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்
இட்டமொழி:
நாங்குநேரியில் மேற்கு ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு வரவேற்றார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், அனைத்து கிளைகழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.