தி.மு.க.வில் தலைவர் தலைமையில் ஒரே அணி தான்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

‘‘தி.மு.க.வில் தலைவர் தலைமையில் ஒரே அணி தான்’’ என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-06-26 18:49 GMT

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ''மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்'' என்றார். தொடர்ந்து திராவிட மாடல், தேசிய மாடலாக மாறுமா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என நிருபரை பார்த்து அவர் பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தி.மு.க.வின் பி டீம் ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, ''தி.மு.க.வில் ஏ டீம், பி டீம் என்பது கிடையாது. தலைவர் தலைமையில் ஒரே அணி (டீம்) தான்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்