திருக்கோவிலூரில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
மின்கட்டணை உயர்வை கண்டித்து திருக்கோவிலூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க.சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், மும்மூர்த்தி, பன்னீர்செல்வம், சரவணன், நகர செயலாளர் அஷரப் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.