சங்கரன்கோவில், சிவகிரியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
சங்கரன்கோவில், சிவகிரியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடக்கிறது என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான கூட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ெரயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய் சாந்தி திருமண மண்டபத்திலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கான கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சிவகிரி தேவர் திருமண மண்டபத்திலும் நடக்கிறது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில அயலக அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் புகழ்காந்தி மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் நல்லசேதுபதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை, வார்டு செயலாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.