தி.மு.க. கொடி ஏற்றி வைத்தார்

புளியங்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்

Update: 2022-12-08 18:45 GMT

புளியங்குடி:

தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து ெகாண்ட பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புளியங்குடி வழியாக சென்றார். அப்போது புளியங்குடி நகர எல்லையில் அவருக்கு நகரசபை தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர். மேளதாளம், செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கரும்புகள் மற்றும் வாழை மரங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், ெதாடர்ந்து சிந்தாமணியில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிந்தாமணியில் அமைக்கப்பட்டிருந்த அன்பழகன் நினைவு 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், நகரசபை கவுன்சிலர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்