நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை - ஜெயக்குமார் விமர்சனம்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2023-08-16 08:37 GMT

சென்னை,

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூரியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு கொஞ்சமும் உரிமையில்லை. நீட் தேர்வு விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது.

அதிமுக மாநாடு வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஆகஸ்ட் 20-ல் திமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுகவை தூங்கவிடாமல் செய்கிறது அதிமுக என்பதற்கு அவர்களது போராட்ட அறிவிப்பே உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்