தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-12-16 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலினை தேர்ந்தெடுத்த பொதுக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பது, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடுவது, 15-வது அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், மாநில விவசாய அணி இணை செயலாளர் அருட்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை.எம்.சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்