தி.மு.க. பொதுக்கூட்டம்

பரமன்குறிச்சியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

உடன்குடி:

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பரமன்குறிச்சியில் தமிழக அரசின் 2-ம் ஆண்டுசாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.இளங்கோ தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் துணைத்தலைவி மீரா சிராஜூதீன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கணேசன், ஒன்றிய பொருளாளர் பாலகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் சாதனைகள் குறித்து தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை ரவி, மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலர் ஜெஸி பொன்ராணி, பேச்சாளர் இளங்கவி ஜஹாங்கீர் ஆகியோர் பேசினா். இதில் செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி செயலர் மனோஜ், மாவட்ட மாணவரணி துணை செயலர் செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் போலையர்புரம் காமராஜ்நகர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. இந்திரகாசி முன்னிலை வகித்தார். சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருக்கல்யாணி வரவேற்றார். கூட்டத்தில் இளைஞர் அணி சார்பாக தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தை படுக்கப்பத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் துணை செயலாளர் ஜெயராமன், மீனவர் அணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரோஸ்லின் கலாவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்