தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கே.வி.கே.சாமி சிலை திறப்பு
தூத்துக்குடியில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கே.வி.கே.சாமி சிலை திறப்பு விழா நடந்தது.
நெல்லை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தி.மு.க. செயலாளராக பணியாற்றியவர் கே.வி.கே.சாமி. தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகே இருந்த அவரது மார்பளவு சிலை சேதம் அடைந்து இருந்தது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலை புதிதாக அதே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவரது சிலையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.