தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-21 18:58 GMT

சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வு மற்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், நகர துணை செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி, சி.செல்வம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், டி.டி.சி.சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்கள். இதில் நகர நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தம்பா கிருஷ்ணன் நன்றி கூறினார்.

ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார்.

இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா, வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் டில்லிபாபு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம் மற்றும் கட்சியினர் பலா் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்