கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற ஜனாதிபதியிடம் மனு அளிக்க திமுக முடிவு
தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது
சென்னை,
தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கோரிக்கை மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.