தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-05-04 20:19 GMT

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் தலைவி தமயந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 15 வார்டு கவுன்சிலர்களில் 13 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலஓமநல்லூர் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் செய்து தர வேண்டும் எனக்கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணவேணி, ஜெபக்குமார், கொடி லட்சுமி, முருகம்மாள், சுதா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்