சொந்த நிதியில் சாலை, வாறுகால் அமைத்த தி.மு.க. கவுன்சிலர்

செங்கோட்டையில் தி.மு.க. கவுன்சிலர் சொந்த நிதியில் சாலை, வாறுகால் அமைத்துக் கொடுத்தார்.

Update: 2022-11-24 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் 12-வது வார்டு கே.சி. ரோடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் குழந்தைகள் அவதியடைந்தனர். இதையடுத்து நகராட்சி கவுன்சிலரும், தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளருமான இசக்கித்துரை பாண்டியன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் செலவில் புதிய சிமெண்டு சாலை அமைத்து கொடுத்துள்ளார். இதேபோன்று அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு எதிர்புறம் உள்ள தெருவில் வாறுகாலும் சொந்த நிதியில் அமைத்து கொடுத்துள்ளார். இதையடுத்து நகராட்சி கவுன்சிலர் இசக்கித்துரை பாண்டியனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்