தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
திருவெண்காட்டில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
திருவெண்காடு:
திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் உதய ராணி உத்தரமூர்த்தி, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். இதில் ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் பற்றிய விவரம், தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.