தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
நாகையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகை தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தி.மு.க.வினர் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற வேண்டும். முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் உள்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.