தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டது - அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-08-03 18:59 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பா ஜனதா தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கோவையில் வக்கீல் உதயகுமார் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் தொடங்கி, தி. மு. க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், வக்கீல்கள், பொதுமக்கள் என யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது. சமூக வலைதளங்களில், தி.மு.க. அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கிய கடமையான சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்