தி.மு.க.,அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் கடை, பார்கள்தான் அதிகரிப்பு அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேச்சு

தி.மு.க., அ.தி.மு.க.ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகளும், பார்களும்தான் அதிகரித்துள்ளன என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.குற்றம் சாட்டினார்.

Update: 2022-12-24 17:34 GMT

காவேரிப்பாக்கம்

தி.மு.க., அ.தி.மு.க.ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகளும், பார்களும்தான் அதிகரித்துள்ளன என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.குற்றம் சாட்டினார்.

கள ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்கைநல்லூர் ஊராட்சியில் பா.ம.க. கிளை பொறுப்பாளர்கள் கள ஆய்வு கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் தர்மராஜா கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.மக.. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:-

தமிழகத்தில் 55 ஆண்டு காலமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மாறி, மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் மக்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. மாறாக டாஸ்மாக் கடைகளும், பார்களும் அதிகரித்து வருகிறது.

பா.ம.க.. ஆட்சிக்கு வந்தால் இலவசமாக தரமான கல்வி, தரமான சுகாதாரம், மருத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி குடும்பத்தை பாதுகாப்போம்.

நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு வாய்ப்பு அளித்து செயல்பாட்டை பார்க்க வேண்டும் என்ற மனநிலையில் பொதுமக்கள் உள்ளனர். உறுதிபடுத்த பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

மாற்றம் வரும்

தமிழகத்தில் பெண்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் மனதுவைத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும். பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள இளைஞர்களை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பொதுமக்கள் பொய்கைநல்லூர் கிராமத்திற்கு வரும் தார்சாலையொட்டி அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது குறித்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் பேசி அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அன்புமணி ராமதாஸ் எம்.பி.தெரிவித்தார்.

கூட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்/

Tags:    

மேலும் செய்திகள்