தி.மு.க. பிரமுகரை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் மறியல்

தி.மு.க. பிரமுகரை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-22 18:45 GMT

திருப்பத்தூர்

தி.மு.க. பிரமுகரை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சி அத்திகுப்பம் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைசெய்து கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சாமு அங்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் பொம்மிகுப்பம் ஊராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தகாத வார்த்தையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பத்தூர் பொம்மிகுப்பம் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சாமுவை கைது செய்ய வேண்டும் என கூறினார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்