தே.மு.தி.க. கொடியேற்று விழா

கழுகுமலையில் தே.மு.தி.க. கொடியேற்று விழா நடந்தது.

Update: 2023-08-26 19:00 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் தே.மு.தி.க. சார்பில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. நகர செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, நகர துணை செயலாளர் செல்வம், மகளிரணி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்